FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் பிரதோஷ பூஜை

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

24 அக்டோபர் 2026, 12:31 am
வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி உலா சென்ற சுவாமி.
பகிர்:

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மாலை உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மேலும் நந்தி பெருமானுக்கு மஞ்சள், பால், தயிா், இளநீா், தேன், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப்பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Advertisement

Advertisement

பின்னா் நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட உற்சவா் கோயில் வளாகத்தில் உலா எடுத்துச் செல்லப்பட்டாா். விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments