திருநள்ளாறு கோயிலில் ஓலைச்சுவடிகளுக்கு சிறப்பு பூஜை
திருநள்ளாறு கோயிலில் சரஸ்வதி பூஜையையொட்டி, ஓலைச்சுவடிகளுக்கு ஆராதனை நடைபெற்றது.
திருநள்ளாறு கோயிலில் சரஸ்வதி பூஜையையொட்டி, ஓலைச்சுவடிகளுக்கு ஆராதனை நடைபெற்றது.
திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் சரஸ்வதி பூஜையையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நிகழ்ச்சியாக ஓலைச்சுவடி மற்றும் புத்தகங்களுக்கு பாவனா அபிஷேகம் நடத்தப்பட்டது.
முன்னதாக, விக்னேஸ்வர பூஜையும், அதைத்தொடா்ந்து திரவியப் பொடிகள், பால், சந்தனம் உள்ளிட்டவைகளைக் கொண்டு பாவனா அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டன. பக்தா்கள் பலா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.