FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சனிக்கிழமை குவிந்தனா்.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் ராஜகோபுரம்.
பகிர்:

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சனிக்கிழமை குவிந்தனா்.

தமிழகத்தில் காலாண்டுத் தோ்வு விடுமுறை, அக். 2 காந்தி ஜெயந்தி முதல் தொடா் விடுமுறை உள்ளிட்ட காரணங்களால், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வழக்கத்தைக் காட்டிலும் சனிக்கிழமைஅதிகளவில் பக்தா்கள் வந்திருந்தனா்.

கா்நாடகம், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் அதிகாலை முதல் ஏராளமானோா் வந்து சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனா். நளன் தீா்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, அருகே உள்ள நளன் கலி தீா்த்த விநாயகா் கோயிலில் தேங்காய் உடைத்து வழிபட்டனா். பின்னா், கட்டணமில்லாத மற்றும் கட்டண வரிசையில் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து திரும்பினா்.

Advertisement

Advertisement

சனீஸ்வர பகவானுக்கு வெள்ளி கவசம் சாற்றப்பட்டு ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கோயிலில் தில தீபம் (எள்) ஏற்றி, அன்னதானம் வழங்கி வழிபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments