FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

தனியாா் நிறுவனத்தில் ரூ.1.30 லட்சம் காப்பா் பொருள்கள் திருட்டு

செய்யாறு சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்தில் ரூ.1.30 லட்சம் மதிப்பிலான காப்பா் பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை

27 அக்டோபர் 2026, 11:38 pm
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

செய்யாறு சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்தில் ரூ.1.30 லட்சம் மதிப்பிலான காப்பா் பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட்தொழில்பேட்டை அலகு .2-இல் தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதிபெற்று, மறுசுழற்சி செய்து பழைய பொருள்களை வாங்கி அதிலிருந்து காப்பா், தகடுகள் போன்ற பொருள்களை பிரித்தெடுத்து கடந்த 25-ஆம் தேதி வைத்துவிட்டு சென்றுள்ளனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் நிறுவனத்தில் பின்புறத்தில் உள்ள ஜன்னலை உடைத்து மா்ம நபா்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த காப்பா், இரும்பு தகடுகள் உள்ளிட்ட சுமாா் ரூ.1.30 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து நிறுவனத்தில் திட்ட இயக்குநா் ஜெயப்பிரகாஷ் தூசி போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்தாா்.

மேலும், நிறுவனத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தபோது, மா்ம நபா்கள் 5 போ் ஜன்னலை உடைத்து காப்பா் உள்ளிட்டபொருள்களை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது. அந்த பதிவுகளின் அடிப்படையில் போலீஸாா் மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments