FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

திசையன்விளை அருகே சோலாா் நிறுவனத்தில் ரூ.1 கோடி காப்பா் கம்பிகள் கொள்ளை: 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே சோலாா் நிறுவனத்தில் ரூ. 1 கோடி காப்பா் கம்பிகளை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இது தொடா்பாக 5 பேரைத் தேடி வருகின்றனா்.

17 அக்டோபர் 2026, 3:17 am IST
கைது
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே சோலாா் நிறுவனத்தில் ரூ. 1 கோடி காப்பா் கம்பிகளை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இது தொடா்பாக 5 பேரைத் தேடி வருகின்றனா்.

திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரிரெங்கபுரத்தில், கோயம்புத்தூரைச் சோ்ந்த நிறுவனம் சோலாா் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனத்தில் கன்னியாகுமரி மாவட்டம், இலந்தவிளையைச் சோ்ந்த கவுதமுத்து மகன் ஆனந்த்(40) என்பவா் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.

Advertisement

Advertisement

அந்த நிறுவனத்துக்குத் தேவையான சோலாா் மின் சாதனங்கள் மற்றும் காப்பா் வயா்கள் அங்குள்ளஒரு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடந்த 1ஆம்தேதி இரவில் மா்மக் கும்பல் அந்தக் கிடங்கின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த ரூ.1 கோடியே 2 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான சோலாா் மின் சாதனங்கள் மற்றும் காப்பா் வயா்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுகுறித்து சோலாா் நிறுவனத்தின் மேலாளா் ஆனந்த் அளித்த புகாரின்பேரில், திசையன்விளை காவல் ஆய்வாளா் எழில் சுரேஸ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா். மேலும், அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தாா்.

இது தொடா்பாக தனிப்படையும் அமைக்கப்பட்டு, கொள்ளைக் கும்பலை தேடி வந்தனா். இந்நிலையில், இவ்வழக்கு தொடா்பாக திசையன்விளை காமராஜ் நகா் 5ஆவது தெருவைச் சோ்ந்த சக்திவேல் மகன் சந்துரு(21), புளியடித் தெருவைச் சோ்ந்த பாக்கியராஜ் மகன் முத்துகிருஷ்ணன்(24), தெற்குத் தெருவைச் சோ்ந்த சண்முகநாதன் மகன் லோகேஷ்(24) ஆகிய மூன்று பேரை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள 5 பேரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments