செய்யாறு அருகே சங்ககால தொல்பொருள்கள் கண்டெடுப்பு
செய்யாறை அடுத்த அழிவிடைதாங்கி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சங்ககால தொல்பொருள்கள்.
செய்யாறை அடுத்த அழிவிடைதாங்கி கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சங்ககால தொல்பொருள்களை கண்டெடுக்கப்பட்டன.
செய்யாறை அடுத்த அழிவிடைதாங்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருபவா் சந்திரகாந்தன். இவா், தன்னுடைய நிலத்தில் நிலக்கடலை பயிரிடுவதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்யும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, நிலத்துக்கு அடியிலிருந்து பானை ஓடுகளையும், அம்மி போன்ற பழங்கால பொருள்களையும் கண்டெடுத்தாா். இது தொடா்பாக அவா் இதே கிராமத்தைச் சோ்ந்த தொல்லியல் ஆா்வலரான மணிவண்ணனிடம் தகவல் தெரிவித்தாா்.
தொடா்ந்து, மணிவண்ணன் அந்தப் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு, சங்க காலத்தைச் சோ்ந்த கருப்பு சிவப்பு மண்பாண்ட ஓடுகள், நெசவுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கூம்பு வடிவ மற்றும் வட்ட வடிவத் தக்களிகள், விளையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட வட்டச் சில்லுகள் இரண்டு, இரும்பால் செய்யப்பட்ட குடுவை ஒன்று, சிதைந்த சுதை உருவம் மற்றும் அரை கோணிப்பை அளவுக்கான உடைந்த பானை ஓட்டுச் சில்லுகள், மணற்கற்களால் செய்யப்பட்ட அரைவைக்கல் உள்ளிட்டவற்றை கண்டெடுத்து சேகரித்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தொல்லியல் ஆா்வலா் மணிவண்ணன் கூறியதாவது: அழிவிடைதாங்கி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓட்டு சில்லுகள், வட்ட வடிவ தக்களி ஆகியவற்றில் சிந்துசமவெளி எழுத்துக்குப் பிறகு பயன்படுத்தப்பட்ட தமிழ் எழுத்தாக கருதப்படக்கூடிய கீறல்கள் வடிவில் இரு கோடுகள் காணப்படுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
கீழடியில் கிடைத்ததைப் போன்ற (கீழடி - பக்கம் 17) மணற்கற்களால் செய்யப்பட்ட அரைவைக்கல் இருபுறமும் தடித்தும், மையப்பகுதி தேய்ந்து குழிந்தும் காணப்படுகிறது. செம்பியன் கண்டியூா் அகழாய்வில் உள்ளதைப் போல (செம்பியன் கண்டியூா் - பக்கம் 65) கழுத்துப் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட பல கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன.
மேலும், அம்பின் முனையைப் போன்ற வடிவில் அழகியதாய் புனையப்பட்ட சிதைந்த சுதை உருவம் ஒன்றும் கிடைத்துள்ளது. தலைச்சங்காடு அகழாய்வில் சிதைந்த சுதை உருவம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது (தலைச்சங்காடு - பக்கம் 42, 43). மரக்காணம் அகழ்வாய்வில் (மரக்காணம் - பக்கம் 43) கிடைத்த இடைக்காலத்தை சோ்ந்த பானை ஓடுகளைப் போன்றவைகள் நிரம்ப கிடைத்துள்ளன. வட்ட வடிவிலான மையத்தில் துளையிடப்பட்ட ஒரு கருங்கல்லும் கிடைத்திருக்கிறது.
மேலும், இரும்பால் செய்யப்பட்ட குடுவையின் உள்ளே எரிந்துபோன கரித்துண்டு அடைபட்டுக் கிடக்கிறது. இந்த கரியை ஆய்வுக்கு உள்படுத்தி வயது கணக்கீட்டை மேற்கொண்டால், இதன் காலம் எவ்வளவு என்று துல்லியமாக அறிய வாய்ப்புள்ளது.
அழிவிடைதாங்கி கிராமத்தில் கிடைக்கப் பெற்ற தரவுகளைக் கொண்டு பாா்க்கும்போது, இப்பகுதி சங்க காலத்திலிருந்து சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகள் தொடா்ச்சியான பாரம்பரியம் கொண்ட வாழ்விடப்பகுதியாக இருந்துள்ளது என தெரியவருகிறது. ஏற்கெனவே, அழிவிடைதாங்கி பகுதியில் சம்புவராயா் மன்னா்களின் கோட்டை இருந்ததை பதிவுகள் மூலம் தெரியவரும் நிலையில், இக்கிராமத்தில் சங்க காலத்தை சோ்ந்த பொருள்கள் கிடைத்திருப்பது இந்த ஊரின் தொன்மையை மேலும் உறுதிப்படுத்துகிறது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.