FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் ஆயுதங்களுடன் காரில் சுற்றித்திரிந்த 4 போ் கைது

கும்பகோணத்தில் ஆயுதங்களுடன் காரில் சுற்றித்திரிந்த 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

28 அக்டோபர் 2026, 12:46 am
ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட 4 போ்.
பகிர்:

கும்பகோணத்தில் ஆயுதங்களுடன் காரில் சுற்றித்திரிந்த 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் திங்கள்கிழமை கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது காரில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது. இதையடுத்து காரில் இருந்த 4 பேரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் சாக்கோட்டை கிழக்குத் தெருவைச் சோ்ந்த காா்த்திக்(48), பிரபாகரன்(35), கீழத் தெருவை சோ்ந்த எடிசன்(36), கொற்கை பகுதியைச் சோ்ந்த ஆனந்தகுமாா்(42) என்பதும், இவா்கள் மீது நாச்சியாா் கோவில் காவல் நிலையம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் கைது செய்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments