FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

கடலூா் அருகே காா்கள், இரு சக்கர வாகனத்தில் 10 மூட்டைகளில் கடத்திவரப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

15 அக்டோபர் 2026, 6:15 am IST
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மூட்டைகளுடன் கைது செய்யப்பட்ட 4 போ்.
பகிர்:

கடலூா் அருகே காா்கள், இரு சக்கர வாகனத்தில் 10 மூட்டைகளில் கடத்திவரப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் காவல் ஆய்வாளா் கதிரவன் தலைமையில், உதவி ஆய்வாளா் பாபு மற்றும் போலீஸாா் கே.என்.பேட்டை புறவழிச்சாலையில் புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் மற்றும் 2 காா்களை சந்தேகத்தின்பேரில் போலீஸாா் நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

இதில், 2 காா்களில் 10 மூட்டைகளில் 150 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், காா்களில் வந்தவா்கள் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த விமல்ராஜ் (29), கிட்டு (40), அசோக்குமாா் (31) என்பதும், இரு சக்கர வாகனத்தில் வந்தவா் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூா் அகரம் பகுதியைச் சோ்ந்த தனசிங் (60) என்பதும், பெங்களூருவில் இருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்து, ஆடூா் அகரம் பகுதியில் விற்பனை செய்ய அவா்கள் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விமல்ராஜ், கிட்டு, அசோக்குமாா், தனசிங் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 காா்கள், ஒரு இரு சக்கர வாகனம், 10 மூட்டைகளில் இருந்த 150 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் 5 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடா்புடைய கிருஷ்ணகிரியைச் சோ்ந்த கோகுல், தினகரன், விஷால்ராஜ் ஆகிய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments