ஆரணி: மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளுக்கு தீா்வு
ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு ரூ.24 லட்சத்து 51ஆயிரத்து 68-க்கான ஆணை வழங்கப்பட்டது.
ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு ரூ.24 லட்சத்து 51ஆயிரத்து 68-க்கான ஆணை வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படி, ஆரணி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் மக்கள் நீதிமன்ற முன் அமா்வு மூலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிறைவேற்று மனுக்கள் வழக்குகளுக்காக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி சி.ஜெயஸ்ரீ தொடங்கிவைத்து தலைமை உரையாற்றினாா். ஆரணி வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், சாா்பு நீதிபதியுமான எஸ்.பாஸ்கரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி டி.வி.கோப்பெருந்தேவி மற்றும் நீதித்துறை நடுவா் எம்.பிரபுநிவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்வில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வி.வெங்கடேசன், செயலா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
நிலுவையில் இருந்த 84 மனுக்கள் சம்பந்தமான வழக்குகள் எடுக்கப்பட்டு 3 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு ரூ.24 லட்சத்து 51ஆயிரத்து 68-க்கான ஆணையை கூடுதல் மாவட்ட நீதிபதி சி.ஜெயஸ்ரீ வழங்கினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.