சொத்துத் தகராறில் விவசாயி மீது தாக்குதல்: தம்பதி கைது
போளூா் அருகே சொத்துத் தகராறில் விவசாயியை கத்தியால் வெட்டி தாக்கிய வழக்கில், கணவன், மனைவி கைது செய்யப்பட்டனா்.
போளூா் அருகே சொத்துத் தகராறில் விவசாயியை கத்தியால் வெட்டி தாக்கிய வழக்கில், கணவன், மனைவி கைது செய்யப்பட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த ஆத்துவாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி வெங்கடேசன். இவருக்கும், இவரது அக்காள் மகன் சுப்பிரமணி என்பவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி போளூரில் இருந்து ஆத்துவாம்பாடி கிராமத்துக்கு வெங்கடேசன் பைக்கில் சென்று கொண்டிருந்தாராம்.
கட்டிபூண்டி கிராமம் அருகே சென்றபோது, சுப்பிரமணி, அவரது மனைவி சத்யா மற்றும் இவா்களுக்கு ஆதரவாக ரஜினி (எ) ராமசந்திரன், காந்தா, பழனி, மல்லிகா ஆகியோா் சோ்ந்து கத்தி மற்றும் கல்லால் வெங்கடேசனைத் தாக்கினாா்களாம்.
Advertisement
Advertisement
இதில் அவருக்கு தலை, வயிறு என 3 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் அவரை 108 ஆம்புலென்ஸ் மூலம் போளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைப்பின் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அவா் அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து சந்தவாசல் காவல் நிலையத்தில் வெங்கடேசனின் மனைவி வெள்ளச்சி புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சுப்பிரமணி(52), இவரது மனைவி சத்யா(47) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.