மயங்கி விழுந்த விவசாயி உயிரிழப்பு
செய்யாறு அருகே மயங்கி விழுந்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி உயிரிழந்தாா்.
செய்யாறு அருகே மயங்கி விழுந்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், உக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஞானவேல்(56). இவரது மனைவி உஷா. இவா்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனா். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயி ஞானவேல் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி ஞானவேல் திடீரென மயங்கி விழுந்தாா். உடனே குடும்பத்தினா் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
Advertisement
Advertisement
பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஞானவேல் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.