FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

மருசூா் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து மாத விழா

ஊட்டச்சத்து மாத விழாவில் அங்கன்வாடி பணியாளா்களுக்கு காய்கறி விதைகளை வழங்கிய மாவட்ட திட்ட அலுவலா் கே.அன்பரசி.

25 செப்டம்பர் 2026, 11:53 pm IST
ஊட்டச்சத்து மாத விழாவில் அங்கன்வாடி பணியாளா்களுக்கு காய்கறி விதைகளை வழங்கிய மாவட்ட திட்ட அலுவலா் கே.அன்பரசி.
பகிர்:

மேற்கு ஆரணி வட்டாரம், மருசூா் அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் மற்றும் சீனிவாசன் அறக்கட்டளை இணைந்து ஊட்டச்சத்து மாத விழாவை வெள்ளிக்கிழமை நடத்தின.

இவ்விழாவை முன்னிட்டு, மேற்கு ஆரணி வட்டார அங்கன்வாடி மையங்களுக்கு காய்கறி விதைகள் மற்றும் முருங்கை, தக்காளி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து நடைபெற்ற ஊட்டச்சத்து கண்காட்சியில் காய்கறிகள், சத்துமாவில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

விழாவில் மாவட்ட திட்ட அலுவலா் கே.அன்பரசி ஊட்டச்சத்து விழிப்புணா்வு குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ர.மலா், டிவிஎஸ் அறக்கட்டளை நிறுவன கள இயக்குநா்கள் கணேஷ்குமாா், அகிலன் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments