கடத்தப்பட்ட மாணவர் மீட்பு: 2 பேர் கைது
வேலூரில் கடத்தப்பட்ட மாணவர் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி சுகுணா (29). முத்துக்குமார்
வேலூரில் கடத்தப்பட்ட மாணவர் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி சுகுணா (29). முத்துக்குமார் திருவண்ணாமலையைச் சேர்ந்த பெருமாள், பரசுராமன் ஆகியோரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். சரிவர வட்டியை தராத நிலையில், முத்துக்குமார் சரியான பதிலை அளிக்கவில்லை.
இந்த நிலையில், 10-ஆம் வகுப்பு பயிலும் முத்துக்குமாரின் மகன் சிவசங்கர் (15) ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனார். சுகுணாவிடம் செல்லிடப்பேசியில் பேசிய பெருமாள் தரப்பினர், சிவசங்கரை கடத்தி வைத்துள்ளதாகவும், பணத்தை கொடுத்துவிட்டு மகனை மீட்டுச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து சுகுணா பாகாயம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் விசாரணை மேற்கொண்டு பெருமாள், பரசுராமன் ஆகியோரை கைது செய்து, சிவசங்கரை மீட்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.