குறைதீர் கூட்டத்தில் ரூ.95 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், ரூ.95.06 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், ரூ.95.06 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் தலைமை வகித்து, 632 மனுக்கள் பெறப்பட்டன.
பின்னர், சமூக நலத் துறை சார்பில் 159 பயனாளிகளுக்கு ரூ.93 லட்சத்து 81 ஆயிரத்து 218 மதிப்பிலான தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
Advertisement
Advertisement
அத்துடன் வாலாஜா வட்டம், தாழனூர், கூராம்பாடி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த இரண்டரை வயது குழந்தையின் பெற்றோருக்கு நிவாரண நிதியாக ரூ.1 லட்சமும், நாட்டறம்பள்ளியை அடுத்த சின்னமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி காயமடைந்தமைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டன.
வேலூர் வட்டத்தைச் சேர்ந்த 25 பேருக்கு குடும்ப அட்டையும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் இருளர் இனத்தைச் சேர்ந்த 25 பயனாளிகளுக்கு சாதிச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.