FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மது விலக்கு கோரி தீவிர கையெழுத்து இயக்கம்

மது விலக்கு கோரி, பொதுமக்களிடம் கையெழுத்துகளை அதிகம் பெறும் வகையில் கையெழுத்து இயக்கத்தை தீவிரப்படுத்துவது என அரக்கோணம் நகர தமாகா முடிவு செய்துள்ளது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

மது விலக்கு கோரி, பொதுமக்களிடம் கையெழுத்துகளை அதிகம் பெறும் வகையில் கையெழுத்து இயக்கத்தை தீவிரப்படுத்துவது என அரக்கோணம் நகர தமாகா முடிவு செய்துள்ளது.

அரக்கோணத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நகர தமாகா செயல்வீரர்கள் கூட்டத்தில், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு நகரத் தலைவர் துரை.சீனிவாசன் தலைமை வகித்தார்.

மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.ஜி.லவக்குமார், பி.ராஜ்குமார், பி.ரமேஷ் தாரிவால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணியின் மாவட்டத் தலைவர் எஸ்.இந்திரன் குமார் வரவேற்றார்.

Advertisement

Advertisement

மாற்றுத் திறனாளிகள் அணியின் மாநில அமைப்பாளர் ஜி.குடியரசு, கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர்கள் கோபன்னா ரவி, கே.ஆர்.நவீன், மாவட்டப் பொதுச்செயலர் ஜெ.தமீன், மகளிர் அணியின் மாவட்டத் தலைவி சாந்த செல்வகுமாரி, எஸ்.சி..எஸ்.டி. அணியின் மாவட்டத் தலைவர் ஏ.பி.மணிவேலு, மாவட்டச் செயலர் என்.ஜெயக்குமார், ஒன்றியத் தலைவர் மு.உலகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments