ரயில் விபத்துகள் ஏற்பட்டால் செயல்படுவது எப்படி? அலுவலர்கள், ஊழியர்களிடம் கருத்துக் கேட்பு
பாதுகாப்பான ரயில் இயக்கம், ரயில் விபத்துகள் ஏற்பட்டால் பாதுகாப்புடன் செயல்படுவது குறித்த கருத்தரங்கம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ரயில்வே துறையினரிடம் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் அனுபம் சர்மா கருத்துகளைக் கேட்டறிந்தார்.

எதிர்கால பாதுகாப்பான ரயில் இயக்கத்துக்குத் தேவையான ஆலோசனைகளைப் பெறுமாறு மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதன்பேரில், அரக்கோணம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்குக்கு முதுநிலை கோட்ட மேலாளர் (இயக்குதல்) அருண் பிரதாப் சிங் தலைமை வகித்தார். கோட்ட மேலாளர் அனுபம் சர்மா, கோட்ட மேலாளர் (இயக்குதல்-ஒருங்கிணைப்பு) கே.ஜி.நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
கோட்ட அளவில் ஓட்டுநர்கள், நிலைய மேலாளர்கள், உதவி நிலைய அலுவலர்கள், விபத்து கால ரயிலில் பணிபுரியும் அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துகள் எழுத்து மூலமாகப் பெறப்பட்டன.
இதைத் தொடர்ந்து, அரக்கோணம் ரயில் நிலையத்தை கோட்ட மேலாளர் அனுபம் சர்மா ஆய்வு செய்தார். அப்போது நிலைய மேலாளர் சிவசங்கரன், போக்குவரத்து ஆய்வாளர் எத்திராஜூலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.