வேலூரில் இடியுடன் கூடிய பலத்த மழை
வேலூர் மாநகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடங்கி, சனிக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதில் பெரும்பாலான சாலைகள், தெருக்களில் தண்ணீர் தேங்கியது.
வேலூர் மாநகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடங்கி, சனிக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதில் பெரும்பாலான சாலைகள், தெருக்களில் தண்ணீர் தேங்கியது.
வழக்கத்தைவிட அதிகமாக வெள்ளிக்கிழமை வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த நிலையில், நள்ளிரவுக்குப் பிறகு லேசான மழை பெய்யத் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, மின்னல், இடியுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் நீடித்த மழையால், பெரும்பாலான தெருக்களில் தண்ணீர் ஓடியது. வேலூர் புதிய பேருந்து நிலையம், பேலஸ் கபே சந்திப்பு, காந்தி சாலை திருப்பம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது.
Advertisement
Advertisement
பிற இடங்களில்...
இதேபோல் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம், காவேரிபாக்கம், குடியாத்தம் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது. இதில் கிராமப் பகுதிகளில் ஏராளமான வாழை மரங்கள் சரிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம் (மி.மீட்டரில்):
வேலூர்-57, ஆம்பூர்-52.6, வாணியம்பாடி-40, ஆலங்காயம்-33.8, காவேரிப்பாக்கம்-36.6, வாலாஜாப்பேட்டை-25, சோளிங்கர்-16, திருப்பத்தூர்-11.2, ஆற்காடு-46, குடியாத்தம்-59.2, மேல் ஆலத்தூர்-39.4.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.