FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

"ஸ்நூக்கர் போட்டியில் தங்கம் வெல்ல வாய்ப்பு'

தமிழக அரசு ஆதரவு அளித்தால் ஸ்நூக்கர் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கம் வெல்லும் வாய்ப்பு உண்டு என ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர் ரபாத் ஹபீப் கூறினார்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

தமிழக அரசு ஆதரவு அளித்தால் ஸ்நூக்கர் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கம் வெல்லும் வாய்ப்பு உண்டு என ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர் ரபாத் ஹபீப் கூறினார்.

 அரக்கோணம் விவேகானந்தா கல்விக் குழுமத்தின் அம்பாரி வித்யா மந்திர் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், ஸ்நூக்கர், பில்லியர்ட்ஸ் விளையாட்டுகளுக்கான ஆடுகளத்தை அவர் திறந்துவைத்தார்.

 பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

 ஸ்நூக்கர், பில்லியர்ட்ஸ் விளையாட்டுகள் ஏதோ பணக்காரர்களின் விளையாட்டுகளாக கருதப்பட்டது. இப்போது அனைவரும் விளையாடி வருகின்றனர்.

 தமிழகத்தில் உள்ள ஸ்நூக்கர் சங்கத்தில் 5 மேஜைகள் மட்டுமே உள்ளன. ஆனால் கர்நாடகத்தில் 14 மேஜைகள் உள்ளன. இதனாலேயே பங்கஜ் அத்வானி உள்ளிட்ட மிகப் பெரிய வீரர்கள் அங்கு உருவாகினர்.

 தமிழகத்தில் ஏற்காடு, திண்டுக்கல், அரக்கோணம் உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஸ்நூக்கரை மாணவர்கள் விளையாடி வருகின்றனர்.

 விளையாட்டுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிப்பது பாராட்டப்பட வேண்டியதாகும்.

எனவே மாவட்டங்கள்தோறும் ஸ்நூக்கர் விளையாட்டுக்கான ஆடுகளத்தை அமைத்துக் கொடுங்கள் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அமைத்துத் தந்தால் விரைவில் உலகம் போற்றும் வகையில் தங்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளை தமிழகத்தில் உருவாகலாம் என்றார் ரபாத் ஹபீப்.

 திறப்பு விழாவுக்கு விவேகானந்தா வித்யாலயாவின் கூடுதல் தாளாளர் செந்தில் குமார் தலைமை வகித்தார்.

அம்பாரி வித்யா மந்திர் பள்ளி முதல்வர் டேனி ஆண்டணி வரவேற்றார்.

 ஸ்நூக்கரின் சர்வதேச நடுவர் ஹரிஹரன், சென்னை வேலம்மாள் கல்விக் குழுமத்தின் விளையாட்டுப் பயிற்சியாளர் அமர்தீப் சிங், ஸ்நூக்கர் பயிற்சியாளர்கள் ராம் மனோகர், நவீன், விவேகானந்தா வித்யாலயா கல்வியியல் கல்லூரி முதல்வர் டி.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments