பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள்
பேர்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி, தேன் மலைப் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த பயிர்களை நாசம் செய்தன.
பேர்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி, தேன் மலைப் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த பயிர்களை நாசம் செய்தன.
நான்கு யானைகளும், ஒரு குட்டி யானையும் கூட்டமாக வியாழக்கிழமை தேன் மலைப் பகுதி கிராம எல்லைக்குள் நுழைந்தன. விவசாய நிலங்களுக்குள் புகுந்து, நெல்பயிர்களை நாசம் செய்தன.
தகவலின்பேரில் பேர்ணாம்பட்டு வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வனவர்கள் சங்கரய்யா, தரணி, திருப்பதி உள்ளிட்டோர் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன், பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை வனப் பகுதிக்கு விரட்டினர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.