FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

ரயில் தண்டவாளம் அருகே ஆண் சடலம் மீட்பு

காட்பாடி ரயில் தண்டவாளம் அருகே தூக்கிட்ட நிலையில் இருந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர். 

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:44 am IST
பகிர்:

காட்பாடி ரயில் தண்டவாளம் அருகே தூக்கிட்ட நிலையில் இருந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர். 
காட்பாடி ரயில் நிலையம் அருகே கிளித்தான்பட்டறை பகுதியில் ரயில்வே தண்டவாளத்தையொட்டி, ஆட்கள் ஒதுங்கி நிற்கும் அளவுக்கு சிறிய தடுப்பு உள்ளது. 
இந்தத் தடுப்பு கம்பியில் புதன்கிழமை காலை 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சிறிய கயிற்றால் சடலமாகத் தொடங்கினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காட்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
போலீஸார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது, சடலத்தின் அருகே மதுபாட்டில், சிகரெட் பாக்கெட்டுகள் கிடந்தன. 
இறந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதையடுத்து போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments