FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

6 முதல் அரக்கோணம் நகரில் போக்குவரத்து மாற்றம்

நெடுஞ்சாலையில் உள்ள சிறுபாலம் புதுப்பித்தல் பணி நடைபெற இருப்பதால் அரக்கோணம் நகரில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் போக்குவரத்து

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:33 am IST
பகிர்:

நெடுஞ்சாலையில் உள்ள சிறுபாலம் புதுப்பித்தல் பணி நடைபெற இருப்பதால் அரக்கோணம் நகரில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறை துறையின் இளநிலைப் பொறியாளர் எஸ்.மதனமுசாபர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை அரக்கோணம் உட்கோட்டத்துக்கு உள்பட்ட மாநில நெடுஞ்சாலையான சதுரங்கபட்டினம்-செங்கல்பட்டு-காஞ்சிபுரம்-அரக்கோணம்-திருத்தணி சாலையில், அரக்கோணம், பழனிபேட்டையில் அங்காளம்மன் கோயில் அருகே உள்ள சிறுபாலம் புதை சாக்கடை அமைக்கும் பணிக்காக இடித்து, மீண்டும் கட்டப்பட உள்ளது. 
பாலம் புதுப்பித்தல் பணி நடைபெற இருப்பதால் நகரில் போக்குவரத்தில் சிறு மாற்றம் செய்யப்படுகிறது. 
இந்த மாற்றம் ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு அமலில் இருக்கும். 
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ள பகுதிகள்: 
எஸ்.ஆர்.கேட்டில் இருந்து ரயில் நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்கள் எஸ்.ஆர்.கேட்,  ஏபிஎம் சர்ச் வழியாக சென்று ஒற்றைக்கண் பாலம் வழியாக அங்காளம்மன் கோயில் அருகே வந்து இரட்டைக்கண் வாராவதி பாலத்தை அடைய வேண்டும். இதே வழியை இரு மார்க்க போக்குவரத்துக்கும் பயன்படுத்த வேண்டும். 
எஸ்.ஆர். கேட்டில் இருந்து கிருபில்ஸ்பேட்டை வழியாக இரட்டைக்கண் வாராவதி செல்ல போக்குவரத்து ஒரு மாதத்துக்கு தடை செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments