வேளாங்கண்ணிக்கு புனித யாத்திரை
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணிக்கு ஞாயிற்றுக்கிழமை புனித யாத்திரையைத் தொடங்கினர்.
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணிக்கு ஞாயிற்றுக்கிழமை புனித யாத்திரையைத் தொடங்கினர்.
வேளாங்கண்ணி திருவிழா செப்டம்பர் 8-ஆம் தேதி தேதியும், அதற்கு முன் கொடியேற்றும் நிகழ்ச்சி ஆகஸ்ட் 30-ஆம் தேதியும் நடைபெறுகின்றன. கொடியேற்ற விழாவில் பங்கேற்க வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பங்கினைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கடந்த 60 நாள்களுக்கு முன் தயாரிப்பு ஒருத்தலை கடைப்பிடித்து வந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜெப வழிபாட்டுடன் உதயேந்திரம் இருதய ஆண்டவர் ஆலயத்திலிருந்து வேளாங்கண்ணி மாதா தேரை இழுத்துக் கொண்டு நடைபயணமாகப் புறப்பட்டுச் சென்றனர். 10 நாள்கள் தொடர் நடைபயணமாகச் சென்று ஆகஸ்ட் 29-ஆம் தேதி வேளாங்கண்ணி திருத்தலத்தை அடைகின்றனர். பங்குதந்தை ராயப்பன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புனித யாத்திரையைத் தொடங்கினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.