வங்கிக்கு ரூ. 80 கோடி எடுத்துச் சென்ற கண்டெய்னர் லாரி பழுது
வங்கிக்கு ரூ. 80 கோடி பணம் எடுத்துச் சென்ற கண்டெய்னர் லாரி ஆம்பூர் அருகே செவ்வாய்க்கிழமை பழுதானதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
வங்கிக்கு ரூ. 80 கோடி பணம் எடுத்துச் சென்ற கண்டெய்னர் லாரி ஆம்பூர் அருகே செவ்வாய்க்கிழமை பழுதானதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சென்னை ரிசர்வ் வங்கியிலிருந்து ஒசூரில் உள்ள ஒரு வங்கிக்கு 2 கண்டெய்னர் லாரிகளில் ரூ. 80 கோடி பணம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. ஆம்பூரை கடந்து விண்ணமங்கலம் கிராமம் அருகே சென்றபோது ஒரு கண்டெய்னர் லாரி பழுதானது. ஓட்டுநர் பழுதை சரிசெய்ய முயன்றும் சரியாகவில்லை. இதையடுத்து பழுதான லாரி செங்கிலிகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பழுதை நீக்கும் பணி நடைபெற்றது. மற்றொரு லாரி செங்கிலிகுப்பம் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டது.
வங்கிக்கு பணம் எடுத்துச் சென்ற லாரி பழுதானதால் உடன் சென்ற மற்றொரு லாரி தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டதால், பாதுகாப்புக்காக உடன் சென்ற துப்பாக்கி ஏந்திய போலீஸார் லாரியை சுற்றி பாதுகாப்புக்காக நின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பழுது சரிசெய்யப்பட்ட பிறகு இரு லாரிகளும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.