பைக் விபத்தில் இளைஞர் சாவு
சோளிங்கர் அருகே சாலையோரம் இருந்த அறிவிப்புப் பலகையில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் இறந்தார்.
சோளிங்கர் அருகே சாலையோரம் இருந்த அறிவிப்புப் பலகையில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் இறந்தார்.
சோளிங்கரை அடுத்த கூடலூரைச் சேர்ந்தவர் சுபாஷ் (22). இதே ஊரைச் சேர்ந்தவர் கோவர்த்தனன்(20). இருவரும் சென்னையில் ரயில்வேயில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், புதன்கிழமை பணி முடிந்து அரக்கோணம் வந்த இருவரும் பைக்கில் கூடலூருக்குச் சென்று கொண்டிருந்தனர். ஜோதிபுரம் அருகே சென்றபோது, சாலை அறிவிப்புப் பலகையின் மேல் பைக் மோதியதில் சுபாஷ் நிகழ்விடத்திலேயே இறந்தார். கோவர்த்தனன் பலத்த காயங்களுடன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சோளிங்கர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.