தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறுவு கடன் சங்கத்தின் தலைவர் மற்றும் இயக்குநர்கள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறுவு கடன் சங்கத்தின் தலைவர் மற்றும் இயக்குநர்கள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இச்சங்கத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் 11 இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் தலைவராக திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் க.தேவராஜி மற்றும் துணைத் தலைவராக சதாசிவம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் கூட்டுறவு சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து சங்கத்தைச் சேர்ந்த 62 விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 34 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
விழாவில், கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர் ராஜேந்திரன், திமுக மாவட்ட அவைத் தலைவர் முனிவேல், ஒன்றியச் செயலாளர் அசோகன், மாவட்டப் பொறியாளரணி நிர்வாகி டி.பிரபாகரன், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்கள் குமார் (கிரிசமுத்திரம்), அச்சுதன் (வெள்ளகுட்டை) மற்றும் கூட்டுறவு சங்க இயக்குநர்கள், அலுவலகப் பணியாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.