பாமக நிர்வாகி நியமனம்
பாமக இளைஞர் அணி மாநில துணை அமைப்புச் செயலாளராக அரக்கோணத்தைச் சேர்ந்த கோ.ஏழுமலையை அக்கட்சியின் இளைஞர்
பாமக இளைஞர் அணி மாநில துணை அமைப்புச் செயலாளராக அரக்கோணத்தைச் சேர்ந்த கோ.ஏழுமலையை அக்கட்சியின் இளைஞர் அணி மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒப்புதலோடு தலைவர் ஜி.கே.மணி நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இவர், ஏற்கெனவே பாமக மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட மாணவர் அணித் தலைவர், வன்னியர் சங்க மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர், வன்னியர் சங்கச் செயலர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
இதையடுத்து கோ.ஏழுமலை, மாநில துணைப் பொதுச் செயலர் க.சரவணன், மாநில இளைஞர் அணிச் செயலர் ச.தீனதயாளன், மாவட்டச் செயலர் அ.ம.கிருஷ்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.