FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மண்டல விளையாட்டுப் போட்டி: இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் சாதனை

கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தனர்.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மண்டல அளவில் கல்லூரிகளுக்கு இடையே நீச்சல், இறகுப்பந்து மற்றும் மேஜைப்பந்து போட்டிகள் இசுலாமிய கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இறகுப்பந்து போட்டியில் வாணியம்பாடி இசுலாமிய கல்லூரி முதல் இடமும், வேலூர் மண்டல அணி 2-ஆம் இடமும், கடலூர் மண்டல அணி 3-ஆம் இடமும் பிடித்தனர்.
மேஜை பந்து போட்டியில் வேலூர் மண்டல அணி முதல் இடமும், மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி 2-ஆம் இடமும், கடலூர் மண்டல அணி 3-ஆம் இடமும் பிடித்தனர். நீச்சல் போட்டியில் வாணியம்பாடி இசுலாமிய கல்லூரி மாணவர்கள் 18 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் வென்றனர். மாணவர்கள் அலெக்ஸ், சத்திய நாராயணன் ஆகியோருக்கு தனி நபர் சாம்பியன்ஷிப் பெற்றனர். இதன்மூலம் நீச்சல் போட்டியில் இசுலாமிய கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. 
வெற்றிபெற்ற மாணவர்களில் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை தென் இந்தியா பல்கலைக்கழக இடையிலான போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வாகினர். 
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு திருவள்ளுவர் பல்கலைக்கழக விளையாட்டுத் துறை இயக்குநர்(பொறுப்பு) சையத்ஷபி பரிசுகளை வழங்கினார். 
இஸ்லாமிய கல்லூரிச் செயலாளர் அன்வருல்லா, முதல்வர் டி.முஹம்மத் இலியாஸ், உடற்கல்வி இயக்குநர் மொஹிதீன்அப்துல்காதர், நீச்சல் பயிற்சியாளர் நஜீர் அஹமத் ஆகியோர் மாணவர்களைப் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments