ஆம்பூா் சீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் ரத்து
கரோனா தடை உத்தரவு காரணமாக ஆம்பூா் சீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆம்பூா்: கரோனா தடை உத்தரவு காரணமாக ஆம்பூா் சீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
ஆம்பூா், மேல்கிருஷ்ணாபுரம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் வரும் ஏப். 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கப்பட இருந்தது. ஆனால் கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிப்பித்துள்ளன. வரும் மே 3-ஆம் தேதி வரை தடை உத்தரவு அமலில் இருப்பதால் நடப்பாண்டில் சித்திரை பிரம்மோற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.