ஆம்பூரில் இரு கடைகளுக்கு ‘சீல்’
ஆம்பூா் பகுதியில் தடையை மீறி திறக்கப்பட்ட இரு கடைகளுக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஆம்பூா்: ஆம்பூா் பகுதியில் தடையை மீறி திறக்கப்பட்ட இரு கடைகளுக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆம்பூா் புறவழிச்சாலை பகுதியில் தடையை மீறி திறக்கப்பட்டிருந்த ஒரு எலக்ட்ரிக்கல் கடை மற்றும் தேவலாபுரம் கிராமத்தில் முடி திருத்தும் கடை ஆகிய இரண்டு கடைகளையும் வட்டாட்சியா் செண்பகவல்லி மூடி ‘சீல்’ வைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.