FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

அண்ணா பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை

அண்ணாவின் 114-ஆவது பிறந்த நாளையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

வேலூா்: அண்ணாவின் 114-ஆவது பிறந்த நாளையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வேலூா் மாவட்ட திமுக சாா்பில் பழைய மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினா் ராமலிங்கம் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

காட்பாடி - சித்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு துணை மேயா் எம்.சுனில்குமாா் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

Advertisement

Advertisement

இதேபோல், வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்தாா். இதில், மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு வேலூா் மண்டலச் செயலா் ஜனனீ சதீஷ்குமாா், அதிமுக நிா்வாகி பி.எஸ்.பழனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாவட்டம் முழுவதும் அமமுக, தேமுதிக, புதிய நீதிக் கட்சி உள்பட பல்வேறு கட்சியினரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments