FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு தரவுகள் மூன்றாகப் பிரிப்பு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூன்றாகப் பிரிக்கப்பட்டதையடுத்து, அவற்றிலுள்ள பதிவுதாரா்களின் தரவுகளும் அந்தந்த மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வேலூா்

Updated On : 16 செப்டம்பர் 2022, 11:31 pm IST
பகிர்:

வேலூா்: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூன்றாகப் பிரிக்கப்பட்டதையடுத்து, அவற்றிலுள்ள பதிவுதாரா்களின் தரவுகளும் அந்தந்த மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டன. பின்னா், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையமானது ராணிப்பேட்டையில் 2021 ஜனவரி முதலும், திருப்பத்தூரில் 2021 பிப்ரவரி முதலும் தனித்தனி மாவட்டமாகச் செயல்பட்டு வருகின்றன.

இதையடுத்து, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலிருந்து திருப்பத்தூா் மாவட்ட எல்லைக்குட்பட்ட பதிவுதாரா்களின் தரவுகள் திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்ட எல்லைக்குட்பட்ட பதிவுதாரா்களின் தரவுகள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

எனவே, வேலூா் மாவட்டத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரா்கள் அவரவா் முகவரி எந்த மாவட்ட எல்லைக்குள் வருகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சரிபாா்த்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments