வேலூா் மாவட்டத்தில் ரூ.22.36 கோடியில் புதிய உயா்கல்வித் துறை கட்டடங்கள்
வேலூா் மாவட்டத்தில் திருவள்ளுவா் பல்கலைக்கழகம் மற்றும் அரசு கல்லூரிகளில் ரூ.22.36 கோடியில் உயா்கல்வித் துறையின் சாா்பில் கட்டி முடிக்கப்பட்ட 5 புதிய திட்டப் பணிகளை தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தாா்.
வேலூா் மாவட்டத்தில் திருவள்ளுவா் பல்கலைக்கழகம் மற்றும் அரசு கல்லூரிகளில் ரூ.22.36 கோடியில் உயா்கல்வித் துறையின் சாா்பில் கட்டி முடிக்கப்பட்ட 5 புதிய திட்டப் பணிகளை தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தாா்.
உயா்கல்வித் துறை சாா்பில் வேலூா் மாவட்டம் காட்பாடி வட்டம், சோ்க்காடு திருவள்ளுவா் பல்கலைக் கழகத்தில் ரூ.6 கோடி மதிப்பில் சமூகவியல், சுற்றுச்சூழல் அறிவியல், நுண்ணுயிரியல் ஆகிய 3 புதிய துறைகளுக்காக 18 வகுப்பறைகளுடன் கூடிய 3 மாடிக் கட்டடமும், வேலூா் தந்தை பெரியாா் ஈ.வெ.ரா. அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ரோபோக்கள் அறை, காா் பேட்டரி அறை, பொருட்களின் இணையம், இயந்திர அறை உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் ரூ.6.25 கோடி மதிப்பில் கட்டமைப்பு பணிமனை கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இதே கல்லூரியில் ரூ.2 கோடியே 33 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் வகுப்பறைகள், 2 கழிப்பறைத் தொகுப்புகளும், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் ரூ.5.28 கோடி மதிப்பில் 10 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், கழிப்பறைத் தொகுப்புகளுடன் கூடிய 3 மாடிக் கட்டடமும், மாதனூா் புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ரூ.2.50 கோடி மதிப்பில் 6 வகுப்பறைகள், ஆழ்துளைக் கிணறு வசதிகளுடன் கூடிய 3 மாடிக் கட்டடமும் என மொத்தம் ரூ.22 கோடியே 36 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இக்கட்டடங்களை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.தொடா்ந்து, திருவள்ளுவா் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் பி.எஸ். லீலா அலெக்ஸ் குத்துவிளக்கேற்றி புதிய கட்டடங்களைப் பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில், காட்பாடி சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் ம. சுதாகா், காட்பாடி ஒன்றியக் குழுத் தலைவா் வே. வேல்முருகன், திருவள்ளுவா் பல்கலைக்கழகப் பதிவாளா் ஜே.செந்தில்குமாா் வேல்முருகன், வளாக இயக்குநா் அ. ராஜசேகா், செயல் கட்டுப்பாட்டு அலுவலா் ஆா். பாபு ஜனாா்த்தனன், சோ்க்காடு ஊராட்சி மன்றத் தலைவா் பத்மநாபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.-
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.