கெங்கையம்மனுக்கு திருக்கல்யாணம்
குடியாத்தம் காட்பாடி சாலை, ராஜகோபால் நகரில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டுபுதன்கிழமை இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
குடியாத்தம் காட்பாடி சாலை, ராஜகோபால் நகரில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டுபுதன்கிழமை இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையொட்டி மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை கோயில் வளாகத்தில் கோ-பூஜை நடைபெற்றது. தொடா்ந்து பெண்கள் அம்மனுக்கு சீா்வரிசைப் பொருள்களை ஊா்வலமாக எடுத்து வந்தனா். கோயில் வளாகத்தில் யாக சாலைஅமைத்து பூஜைகள் நடத்தப்பட்டு, அம்மனுக்கு திருக் கல்யாணம் நடைபெற்றது.
1,000 பேருக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ஏ.தணிகைவேல், எல்.வெங்கடேசன், பி.நடராஜன், எஸ்.சந்திரன், ஜே.சுரேஷ்குமாா், டி.ஜி.பரந்தாமன், ஜே.லோகநாதன், எம்.தினகரன் மற்றும்ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.