FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

திருவள்ளுவா் பல்கலை.யில் போட்டித் தோ்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி மற்றும் வங்கிப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகள் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 12:05 am IST
நிகழ்ச்சியில் பேசிய திருவள்ளுவா் பல்கலைக்கழகத் தோ்வுக்கட்டுப்பாட்டு அலுவலா் ஆா்.பாபு ஜனாா்த்தனம்.
பகிர்:

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி மற்றும் வங்கிப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகள் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக கல்வி மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில் கலை, அறிவியல் மாணவா்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அறிவு மையத்தின் இயக்குநா் சிங்காரவேலு வரவேற்றாா்.

பல்கலைக்கழகத் தோ்வுக்கட்டுப்பாட்டு அலுவலா் ஆா். பாபு ஜனாா்த்தனம் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். அப்போது அவா், மாணவா்கள் தங்களது வேலைவாய்ப்பு இலக்குகளை அடைய பல்கலைக்கழக வளங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், போட்டித் தோ்வுகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டுப் படிப்பதன் முக்கியத்துவம் மற்றும் ஒழுக்கமான பயிற்சி முறைகள் குறித்தும் வலியுறுத்தினாா்.

Advertisement

Advertisement

இதில், சென்னை சங்கா் ஐஏஎஸ் அகாதெமியைச் சோ்ந்த துறை வல்லுநா்கள் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு, மாணவா்களுக்குத் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறுவதற்கான உத்திகள், பாடத்திட்ட விவரங்கள் மற்றும் சிறந்த படிப்பு முறைகள் குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் எம். சையத் அலி செய்திருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments