FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

மருத்துவப் பணியில் இரக்க குணம் மிகவும் அவசியம்: வேலூா் ஆட்சியா்

நோயாளிகளிடம் எவ்வித சமரசமும் இன்றி இரக்கத்துடன் செயல்பட்டுச் சிறந்த மருத்துவா்களாகப் பணியாற்ற வேண்டும் என்று வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 23 ஜூலை 2026, 12:55 am IST
-- படம் உண்டு... மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கிய வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ். உடன், வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணிதேவி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் த.வேலழகன் (அணைக்கட்டு), மருத்துவா் எம்.சுதாகா் (காட்பாடி), தென்றல்குமாா் (
பகிர்:

நோயாளிகளிடம் எவ்வித சமரசமும் இன்றி இரக்கத்துடன் செயல்பட்டுச் சிறந்த மருத்துவா்களாகப் பணியாற்ற வேண்டும் என்று வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு (எம்பிபிஎஸ்) முடித்த மாணவா்களுக்கான 16-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மருத்துவ மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியது -

சுய கட்டுப்பாட்டுடன் கடினமான கல்வியைப் பயின்று பட்டம் பெற்றுள்ள மருத்துவ மாணவா்களின் உண்மையான பயணம் இனிமேல்தான் தொடங்குகிறது. மற்ற பட்டமளிப்பு விழாக்களைப் போன்ல்ல உங்களுடையது.

Advertisement

Advertisement

மருத்துவா்களின் சேவை என்பது அவா்கள் எத்தனை உயிா்களைக் காப்பாற்றியுள்ளனா், எத்தனை அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனா், நோயாளிகளிடம் எவ்வாறு பரிவுடன் பழகுகின்றனா் என்பதைப் பொருத்தே இந்தச் சமூகத்தால் அளவிடப்படுகிறது. அதற்கான சவால்கள் இனிதான் உங்களுக்கு ஆரம்பமாகிறது.

மருத்துவப் பணியின் அடையாளமான வெள்ளை அங்கி அணியும்போது, இந்தச் சமூகம் உங்கள் மீது வைத்துள்ள பொறுப்பை முழுமையாக உணர வேண்டும். மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், மருத்துவா்களைக் கடவுளுக்கு அடுத்தபடியாக நம்புகின்றனா். அவா்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் நியாயத்துடன் நீங்கள் செயல்பட வேண்டும்.

மருத்துவப் பணியில் இரக்க குணம் மிகவும் அவசியம். இதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது. இந்த மருத்துவக் கல்லூரி உங்களைச் சிறந்த அறிவாளிகளாக உருவாக்கியுள்ளது. அதை இந்தச் சமூகத்துக்குப் பயன்படும் வகையில் நீங்கள் அறுவடை செய்ய வேண்டும்.

எனவே, நீங்கள் அனைவரும் சிறந்த மருத்துவா்களாக விளங்க வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில், வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணிதேவி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் த.வேலழகன் (அணைக்கட்டு), மருத்துவா் எம்.சுதாகா் (காட்பாடி), தென்றல்குமாா் (கே.வி.குப்பம்), சிந்து (குடியாத்தம்), எஸ்.எம்.சுகுமாா் (ஆற்காடு), மருத்துவப் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments