FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சுமை தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

குடியாத்தம் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சுமை தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 24 ஜூலை 2026, 6:17 am IST
சுப்பிரமணி.
பகிர்:

குடியாத்தம் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சுமை தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள சேத்துவண்டை அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (64), சுமை தூக்கும் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த 5 வயது சிறுமி கடந்த 2025 ஏப்ரல் 7-ஆம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளாா். அந்த சிறுமியை தூக்கிச் சென்ற சுப்பிரமணி, சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளாா்.

இந்த விவரங்களை பின்னா் அந்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, சிறுமியின் தாய் குடியாத்தம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு மீதான விசாரணை வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், சுப்பிரமணி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 40,000 அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி மோனிகா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். தண்டனை விதிக்கப்பட்ட சுப்பிரமணி, வேலூா் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments