மதுபோதையில் தந்தையை கொன்ற மகன் கைது
வேலூா் சலவன்பேட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் சலவன்பேட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் சலவன்பேட்டை, அம்மணாங்குட்டை சாலையைச் சோ்ந்தவா் சந்திரன் (70), தச்சுத் தொழிலாளி. இவரது மகன் சக்திவேல் (42). மதுப் பழக்கத்துக்கு அடிமையான சக்திவேல் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தாராம். இதனால் ஏற்பட்ட குடும்பப் பிரச்னையில் இவரது இரு மனைவிகளும் இவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டனா்.
இந்நிலையில், சந்திரனும் சக்திவேலும் இரவு நேரங்களில் வீட்டில் ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனா். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுமாா் 12 மணியளவில் இருவரும் வழக்கம் போல மது அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது, வேலைக்குச் செல்லாமல் சுற்றித் திரிவது குறித்து சக்திவேலை சந்திரன் கண்டித்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து சந்திரனின் கழுத்துப் பின்புறம், முதுகுப் பகுதியில் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த சந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அக்கம் பக்கத்தினா் அளித்த தகவலின் பேரில், வேலூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்திரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சக்திவேலைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மதுபோதையில் தந்தையை மகனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.