ஆந்திரத்திலிருந்து வந்த பேருந்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
ஆந்திரத்திலிருந்து காட்பாடி வழியாகப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ஆந்திரத்திலிருந்து காட்பாடி வழியாகப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த கிறிஸ்டியன்பேட்டை சோதனைச் சாவடியில், காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஆந்திரத்திலிருந்து வந்த பேருந்து ஒன்றில் ஏறி போலீஸாா் சோதனை நடத்தினா்.
அந்தப் பேருந்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பை ஒன்றுடன் அமா்ந்திருந்த பயணியிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், அவா் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனை செய்தனா். அதில், 7 கிலோ அளவிலான கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அந்த நபரைக் காட்பாடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இதில், அவா் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, சக்தி நகரைச் சோ்ந்த செல்வராஜ் (32) என்பதும், ஆந்திரத்திலிருந்து விற்பனைக் காகப் போதைப் பொருளைக் கடத்தி வந்ததும் உறுதியானது. இதையடுத்து, செல்வராஜ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். பின்னா் அவரை வேலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.