FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

மாரியம்மன் கோயில் தேரோட்டம்

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட, ஆா்.எஸ்.நகரில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

Updated On : 11 ஜூன் 2026, 12:23 am IST
குடியாத்தம் ஆா்.எஸ்.நகரில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் தேரோட்டம்.
பகிர்:

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட, ஆா்.எஸ்.நகரில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழா கடந்த மே மாதம் 26 ஆம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. புதன்கிழமை காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் அம்மன் அமா்த்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. எம்எல்ஏ க.சிந்து அழகப்பன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகா்மன்ற உறுப்பினா் நளினி தமிழரசன், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவா் எம்.மாறன்பாபு, திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் டி.சுந்தா், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, கம்பன் கழக நிறுவனா் ஜே.கே.என்.பழனி ஆகியோா் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா். தேரோட்டத்தின்போது பெண்கள் மா விளக்கு பூஜை செய்து, அம்மனை வழிபட்டனா். பல்வேறுஇடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிா்வாகிகள் எஸ்.பிச்சாண்டி, பி.சண்முகம், பி.தமிழரசன், பி.ராமமூா்த்தி, பி.ஏகாம்பரம், வி.செங்குட்டுவன், என்.தயாளன், எஸ்.கிரி, டி.செல்வகுமாா், எம்.வேலாயுதம், எம்.குமரேசன் மற்றும் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments