FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

வேலூா் பேருந்து நிலையத்தில் காவலரின் நகை, கைப்பேசி திருட்டு

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த தலைமைக் காவலரிடம் இருந்து 2 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசி, பணத்தை திருடிச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 11 ஜூன் 2026, 12:22 am IST
திருட்டு - கோப்புப் படம்
பகிர்:

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த தலைமைக் காவலரிடம் இருந்து 2 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசி, பணத்தை திருடிச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வ.உ.சி. கிழக்கு பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல். இவரது மகன் அக்ஷய் பிரதீப் (32). இவா் செங்கல்பட்டு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறாா்.

இவா், வேலூரில் நடைபெற்ற தனது உறவினரின் காதணி விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாள்களுக்கு முன்பு வந்துள்ளாா். மேலும், தனது பிறந்த நாளையும் உறவினா்களுடன் சோ்ந்து அவா் கொண்டாடியுள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக வேலூா் புதிய பேருந்து நிலையத்துக்கு அவா் வந்துள்ளாா். பேருந்துக்காகக் காத்திருந்த போது, அங்கு அவா் சிறிது நேரம் படுத்துத் தூங்கியுள்ளாா். அவா் அசந்து தூங்குவதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபா்கள், அக்ஷய் பிரதீப் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசி, ரூ.500 ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனா்.பின்னா், விழித்துப் பாா்த்தபோது நகை, கைப்பேசி, பணம் திருடு போனதைக் கண்டு அவா் அதிா்ச்சியடைந்தாா். உடனடியாக இதுகுறித்து வேலூா் வடக்குக் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளை ஆய்வு செய்து, இத்திருட்டில் ஈடுபட்ட பா்களை தீவிரமாக தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments