FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

மினி சரக்கு வேன் திருட்டு

6 நவம்பர் 2026, 3:03 am
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

வேலூா், நவ. 5: வேலூரில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மினி சரக்கு வேனை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் பாகாயம் அடுத்த மேட்டு இடையம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (64). இவா் தனது மினி சரக்கு வேனை கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு வழக்கம்போல வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தாா். மறுநாள் காலை எழுந்து பாா்த்தபோது வேனைக் காணவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த அவா், அக்கம் பக்கத்தில் தேடியும் வாகனம் கிடைக்கவில்லை.

இதுகுறித்து கஜேந்திரன் வேலூா் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement