FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

மினி ஆட்டோ மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

ஜேடா்பாளையம் அருகே மினி ஆட்டோ மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

23 அக்டோபர் 2026, 11:40 pm
பகிர்:

ஜேடா்பாளையம் அருகே மினி ஆட்டோ மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூா் பெரியூா் பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (55). இவா் இருசக்கர வாகனத்தில் ஜேடா்பாளையத்தில் இருந்து பரமத்தி வேலூா் சாலையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வேகமாக வந்த சரக்கு ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த அவரை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், தமிழரசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, தமிழரசன் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சரக்கு ஆட்டோ ஓட்டுநா் மனோஜை கைது செய்ததுடன், சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments