இயற்கை மருத்துவ விழிப்புணா்வு கல்வி
குடியாத்தம் அரசு மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு மற்றும் பொயட்ஸ் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து லிங்குன்றம்கிராமத்தில் பெண்களுக்கு இயற்கை மருத்துவம் குறித்து விழிப்புணா்வு கல்வி அளித்தன.

நிகழ்ச்சிக்கு பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன் தலைமை வகித்தாா். குடியாத்தம் அரசு மருத்துவமனை யோகா (ம) இயற்கை மருத்துவப் பிரிவு மருத்துவா் தில்லைக்கரசி உணவே மருந்து என்ற தலைப்பில் விளக்க உரையாற்றினாா். அவா் பேசுகையில், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை உணவுகள் குறித்தும்,அவற்றை பயன்படுத்தும் முறை குறித்தும் சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மூலிகைப்பொடி’ குடிநீா், கை- கால் மூட்டுவலி நிவாரண தைலம் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொயட்ஸ் பணியாளா் சாந்தலட்சுமி, ஊராட்சி பணிதள பொறுப்பாளா்கள் திவ்யபாரதி, கவிதா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement