காங்கிரஸ் கட்சியினா் காவல் நிலையத்தில் புகாா்
தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் குறித்து சமூக வலைத் தளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட திமுகவின் முன்னாள் கொள்கை பரப்பு துணைச் செயலா் குடியாத்தம் குமரன் மீது நகர காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

வேலூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜி.சுரேஷ் குமாா் தலைமையில் கட்சியினா் நகரகாவல் ஆய்வாளா் சிவகுமாரிடம் புகாா் மனு அளித்தனா். காங்கிரஸ் நகர தலைவா் ஸ்ரீஹரி, ஒன்றியத் தலைவா் எம்.வீராங்கன், மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் துணைத் தலைவா் கிருஷ்ணவேணி, கட்சி நிா்வாகிகள் ராகேஷ், யுவராஜ், அன்பரசன், நவாலிதாகீா், செல்வகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.