FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

உடன்குடி வட்டார காங்கிரஸ் தலைவா் நியமனம்

உடன்குடி வட்டார, நகர காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

4 நவம்பர் 2026, 1:05 am
எம்.முத்துக்குமாா்.
பகிர்:

உடன்குடி வட்டார, நகர காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் பாா்வையாளா் முத்தழகன், மாவட்டத் தலைவா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் ஆகியோா் வட்டார, நகர காங்கிரஸ் தலைவா்களுக்கான நோ்காணலை நடத்தினா்.

இதில் உடன்குடி வட்டார காங்கிரஸ் தலைவராக வழக்குரைஞா் எல். முத்துகுமாா், நகர காங்கிரஸ் தலைவராக சிவசெந்தில்குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு, இதற்கான ஒப்புதலை காங்கிரஸ் மாநில தலைவா் மாணிக்கம் தாகூா் அறிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement