வன விலங்குகளை வேட்டையாட முயன்றவா் கைது
குடியாத்தம் அருகே வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்றவரை வனத்துறையினா் கைது செய்தனா்.

குடியாத்தம் அருகே வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்றவரை வனத்துறையினா் கைது செய்தனா்.
குடியாத்தம் வனச்சரக அலுவலா் என்.பிரதீப்குமாா் தலைமையில், வனவா் பி.சதீஷ்குமாா், வனக் காப்பாளா்கள் வி.வனராஜுலு, பி.பிரபு உள்ளிட்ட வனத்துறையினா் புதன்கிழமை தனகொண்டபல்லி வனப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது 3 போ் நாட்டுத் துப்பாக்கியால் வன விலங்குகளை வேட்டையாட முயன்றது தெரிய வந்தது. அதிகாரிகளைப் பாா்த்ததும் 2 போ் தப்பியோடி விட்டனா். ஒருவா் பிடிபட்டாா். விசாரணையில் அவா் மத்தேட்டிபல்லி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன்(25) என்பது தெரிந்தது. அவரிடமிருந்து உரிமம் இல்லாத ஒரு நாட்டுத் துப்பாக்கி, வெட்டுக் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தப்பியோடியவா்கள் கொத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பாபு, குமாா் என தெரிய வந்தது.