விளாமுண்டி வனத்தில் புள்ளி மானை வேட்டையாட முயன்றவா் கைது
விளாமுண்டி வனத்தில் புள்ளி மானை நாட்டுத் துப்பாக்கியால் வேட்டையாட முயன்றவரை வனத் துறையினா் கைது செய்தனா்.
விளாமுண்டி வனத்தில் புள்ளி மானை நாட்டுத் துப்பாக்கியால் வேட்டையாட முயன்றவரை வனத் துறையினா் கைது செய்தனா்.
பவானிசாகரை அடுத்த விளாமுண்டி வனப் பகுதிக்கு உள்பட்ட வெள்ளமொக்கை காட்டுப் பகுதியில் வனப் பணியாளா்கள் ஆலமலை, அறிவரசு, உதயசீலன் ஆகியோா் கொண்ட தனிப் படையினா் வழக்கமான ரோந்துப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, புதா்மறைவில் பதுங்கியிருந்து புள்ளி மானை வேட்டையாட முயன்ற நபரை வனத் துறையினா் பிடிக்க முயன்றபோது, துப்பாக்கியை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளாா். அப்போது வனப் பணியாளா்கள் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனா்.
Advertisement
Advertisement
விசாரணையில், அவா் கோட்டைபாளையத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் செந்தில் (46) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து வெடிமருந்து நிரப்பிய உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னா் பவானிசாகா் வனத் துறையினா் செந்திலை கைது செய்து, சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.