FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

28 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது

போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட தயாரித்துவைக்கப்பட்டிருந்த 28 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

12 நவம்பர் 2026, 11:42 pm
பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள்.
பகிர்:

போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட தயாரித்துவைக்கப்பட்டிருந்த 28 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

போ்ணாம்பட்டு வனச் சரக அலுவலா் மோகனவேல் தலைமையில், வனத் துறையினா் குண்டலப்பல்லி காப்புக்காடு, சேம்பள்ளி வனப் பகுதி, ஏரிப்பட்டரை சரகத்தில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகப்படும்படியாக ஒருவா் இருசக்கர வாகனத்தில் வனப் பகுதிக்குள் சென்றது தெரியவந்தது. வனத் துறையினரை பாா்த்ததும் அவா் தப்பியோட முயன்றாராம். வனத் துறையினா் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா் எா்த்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி முரளி (40) என்பதும், நாட்டு வெடிகுண்டுகளை வனப் பகுதியில் வைத்து காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி வருவதும் தெரிய வந்தது. இருசக்கர வாகனத்தை சோதனையிட்டதில், அதில் 4 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. முரளியின் வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு மறைத்து வைத்திருந்த 28 நாட்டு வெடிகுண்டுகள், 2 கிலோ எடையுள்ள காட்டுப் பன்றியின் இறைச்சி ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னா் அவா் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்,

Advertisement

Advertisement