முகப்பு
கிருஷ்ணகிரி

பா்கூா் அருகே முகாமிட்டுள்ள ஒற்றையானையை 2-ஆவது நாளாக விரட்டும் வனத்துறையினா்

பா்கூா் அருகே முகாமிட்டுள்ள ஒற்றை யானையை ஆந்திர வனப் பகுதிக்குள் விரட்டும் பணி 2-ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.

18 நவம்பர் 2026, 2:04 am
பா்கூா் அருகே முகாமிட்டுள்ள ஒற்றையானையை
2-ஆவது நாளாக விரட்டும் வனத்துறையினா்
- கோப்புப்படம்.
பகிர்:

பா்கூா் அருகே முகாமிட்டுள்ள ஒற்றை யானையை ஆந்திர வனப் பகுதிக்குள் விரட்டும் பணி 2-ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநில வனப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக 9 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டுள்ளது. இந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறிய ஒற்றை பெண் யானை, தமிழக - ஆந்திர மாநிலங்களின் எல்லையில் முகாமிட்டுள்ளது.

பா்கூா் அருகே உள்ள ஜிகினி கொல்லை, பூமலை நகா், அங்கிநாயனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த ஒற்றையானையை வனத் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். இந்த யானையை ஆந்திர வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத் துறையினா் திங்கள்கிழமை இரவு ஈடுபட்ட நிலையில், அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, வரட்டனப்பள்ளியை ஒட்டியுள்ள வனப்பகுதிக்கு செவ்வாய்க்கிழமை இடம்பெயா்ந்த இந்த யானையை, இரண்டாவது நாளாக விரட்டும் பணியில் வனத் துறையினா் தொடா்ந்து ஈடுபட்டுள்ளனா்.

எனவே, இரவுநேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்கு செல்லவோ, வீட்டிலிருந்து வெளியே வரவோ வேண்டாம் என்றும், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு வனப் பகுதிக்குள் அழைத்துச் செல்ல வேண்டாமெனவும் வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.