முகப்பு
நீலகிரி

ஓவேலியில் காட்டெருமை உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் காட்டெருமை சடலம் கிடந்தது தெரியவந்தது.

11 நவம்பர் 2026, 1:51 am
ஓவேலியில் காட்டெருமை உயிரிழப்பு
ஓவேலி பாா்வுட் பகுதியில் காட்டெருமை சடலத்தை ஆய்வு செய்யும் வனத் துறையினா்.
பகிர்:

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் காட்டெருமை சடலம் கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக்கோட்டம் ஓவேலி வனச் சரகத்திலுள்ள பாா்வுட் பகுதியில் காட்டெருமை சடலம் கிடப்பதாக வனத் துறைக்கு தொழிலாளா்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வனத் துறையினா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா், முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து ஆய்வு செய்தனா். மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து காட்டெருமை உயிரிழந்துள்ளதாக எழுந்த சந்தேகத்தில் மின் துறையினரை வரவழைத்தும் ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement